தராபாத்

தராபாத் நகரில் மெட்ரோ ரெயில் நவம்பர் மாதம் மோடி துவங்கி வைக்கிறார்.

இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் ஐதராபாத் நகரில் முதல் கட்டமாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் வேலை முடிவடந்துள்ளது.  மொத்தமுள்ள 71 கிமீ மேம்பால பாதையில் 29 கிமீ முதல் கட்டமாக சேவை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது.

நவம்பர் 28 முதல் 30 வரை ஐதராபாத் நகரில் மோடி அகில உலக தொழில் முனைவோர் கருத்தரங்குக்கு வர இருக்கிறார்.   தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அப்போது மோடி அதை துவங்கி வைப்பார் என அறிவித்துள்ளார்.

ஐதராபாத் மெட்ரோ ரெயிலின் முக்கிய அம்சங்கள் :

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தினரால் கட்டமைக்கப்படும் மெட்ரோ ரெயிலின் மொத்த தூரம் 71 கிமீ.  அதில் முதல் பகுதியான 29 கிமீ, மியாப்பூரில் இருந்து எல் பி நகர் வரை அமைந்துள்ளது.  மொத்தம் 27 நிலையங்கள் உள்ளன.  இரண்டாம் பகுதி ஜூபிளி பேருந்து நிலையத்தில் இருந்து ஃபலாக்னுமா வரையில் உள்ள 15 கிமீ தூரமாகும்.  இதில் 16 நிலையங்கள் அமைய உள்ளன.  மூன்றாம் பகுதி நாகோலில் இருந்து சில்பரமம் வரை உள்ள 28 கிமீ தூரம் ஆகும்.  இதில் 23 ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன.

மேம்பாலம் மூலமே செல்லும் இந்த மெட்ரோ ரெயில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வணிகப் பகுதிகளை இணக்கும்.  ஒரு கிலோமீட்டருக்கு ஒரு நவீன வசதிகள் கொண்ட ரெயில் நிலையம் அமைக்கப்படும்.

அனைத்து ரெயில் பெட்டிகளும் நவீன வசதிகளுடன் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் தானியங்கு டிக்கட் வழங்கும் இயந்திரமும்,  ஊனமுற்றோருக்கான விசேஷ வசதிகளுடனும் அமைக்கப்படும்.  அனைத்து ரெயில் நிலையங்களிலும், தொலைபேசி, கழிப்பறை, தகவல் மையம் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும்.