ஐதராபாத்:
கொரோனா நோயாளிகளிடம் பிளாஸ்மா தானம் தருவதாக கூடி பலரிடம் பணம் வசூலித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், எராளமான நோயாளிகள் பலியாகி வருகின்றனர். கொரோனா நோய் சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொரோனா வைரஸிலிருந்து மீண்ட நபர்களிட மிருந்து பிளாஸ்மா தானம் பெற்று, அதை நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்குசெலுத்தினால்,  ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும்.  இதனால், பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் அழைப்பு விடுத்துள்ளன.
இநத நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கொரோனா விஷயத்திலும் மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இவர் தனது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில்,  பிளாஸ்மா தேவை என யாராவது பதிவு செய்துள்ளார்களா என தேடி அவர்களை தொடர்புகொண்டு தான் கொரோனா விலிருந்து மீண்டுள்ளதாகவும், பிளாஸ்மா தானமளிக்க தயார் என ஏமாற்றி, அவர்களிடம் இருந்து முடிந்த அளவுக்கு லட்சக்கணக்கில் து ஆன்லைன் மூலம்  பணத்தை கறந்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டந பர் ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்த நிலையில், அந்த இளைஞர் சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  பிளாஸ்மா தானம் தருவாக சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் பணம் சூவலித்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும்,  கொரோனாவுக்கு எதிரான ஆன்டி வைரல் மருந்துகளை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி சிலரை ஏமாற்றியுள்ளார்.  மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள ஐதராபாத் போலீசார் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.