ஐ.பி.எல் தொடரில் 40-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். டேவிட் வார்னர் 11 ரன் எடுத்து ஆர்.பி.சிங் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வில்லியம்சன், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஷிகர் தவான் 33 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.
புனே அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பாவின் அபார பந்து வீச்சை ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது ஐதராபாத் அணி. அடித்து ஆடிய யுவராஜ்சிங் 23 ரன்னில், கனே வில்லியம்சன் 31 ரன்னில், ஹென்ரிக்ஸ் (10 ரன்) , ஆடம் ஜம்பா பந்து வீச்சில் அவுட் ஆனார். ஜம்பா கடைசி ஓவரில் தீபக் ஹூடா (14 ரன்), நமன் ஓஜா (7 ரன்), புவனேஸ்வர்குமார் (1 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 137 ரன்கள் எடுத்தது.
IPL 2016 சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த அஜய் ரகானே இந்தப் போட்டியில் சொற்ப ரன் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். 2 விக்கெட்டுக்களை இழந்து புனே அணி தடுமாறியது. பெய்லியுடன், அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அடுத்து அடுத்து விக்கெட்டை இவர்கள் விக்கெட் இலக புனே அணி ரன்கள் எடுக்க தடுமாறியது.
இறுதி ஒவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, ஆனால் அடுத்த பந்திலேயே ரன் அவுட் ஆனார். இதனால் ஐதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது. சென்ற அட்ட நாயகன் நெக்ரா இந்த போட்டில் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.