சென்னை: சென்னைக்கு புல்லட் ரயில் அமைப்பது தொடர்பாக, தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே திட்ட அறிக்கை சமர்பித்துள்ளது.

சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை மத்திய தெற்கு ரயில்வேதமிழ்நாடு அரசிடம் சமர்பித்தது. புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என்று கூறப்படுகிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026- — 27ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக புல்லட் ரயில் தயாரிக் கும் பணி நடைபெற்றது. தற்போது, குஜராத் மாநிலம் ஆமதாபாத்- மும்பை புல்லட் ரயில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 2017ல் துவங்கப்பட்ட இந்த பணிகள், 2029ல் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, 2027ல் மும்பை- – ஆமதாபாத் வழியில் உள்ள சூரத் – -வாபி பாதையில் புல்லட் ரயில் ஓடத்துவங்கும். 300 கி.மீ., வேகத்திற்கும் மேலாக செல்லக்கூடிய இந்த புல்லட் ரயில், ஜப்பான் நிதி உதவியுடன் அந்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதுபோல, ஐதராபாத் சென்னை இடையேயும் புல்லட் ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மத்திய தெற்கு ரயில்வே, அதற்காக திட்ட அறிக்கை தயாரித்து, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, சென்னை ஹைதராபாத் இடையே 780 கி.மீ. தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கும் திட்ட அறிக்கையை து மத்திய தெற்கு ரயில்வே சமர்பித்துள்ளது. தமிழ்நாடு அரசிடம் சமர்பித்தபுல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் 12 மணி நேர பயணம் 2.30 மணி நேரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.