ஐதராபாத்:
ரியோ ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மின்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து இன்று தாயகம் திரும்பினார்
ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அடுத்து, இந்தியாவின் பேட்மின்டன் வீராங்கனை  பி.வி.‘சிந்து இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் விமான நிலையத்தில் இரு மாநில அரசு அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்தையும் பாராட்டி வரவேற்றனர்.
sindhu2
ஒலிம்பிக்கில் மகளிர் பேட்மிண்டன் இறுதி போட்டியில் தோற்றாலும், வெள்ளி வென்று சாதித்தார் பி.வி.சிந்து. பேட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புகழை பெற்றார்.
சிந்துவை வரவேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடினர்.  வழி நெடுக ரசிகர்கள் கூட்டம் நின்றது. சிந்து வந்ததும், அங்கு கூடியிருந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
sindhu1
பி.வி.சிந்து ஐதராபாத் விமான நிலையம் வந்ததும் அவருக்கு மாலை அணிவித்தும், இனிப்பு ஊட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிந்துவை ஊர்வலமாக அழைத்து செல்ல திறந்த பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பஸ்சில் சிந்துவும், அவரது கோச்சும் ஏறி ரசிகர்களின் வாழ்த்தை பெற்றனர்.
இதன் காரணமாக விமான நிலையம் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. விமான நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐ தராபாத் கச்சிபவுளி மைதானத்தில் சிந்துவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.