ஐதராபாத்
பாஜக பொதுச் செயலர் பி முரளிதர ராவ் மற்றும் 8 பேர் மீது ஐதராபாத் காவல் துறையினர் ரூ.2.17 கோடியை போர்ஜரி செய்து ஏமாற்றியதாக வழக்கு பதிந்துள்ளனர்.
ஐதராபாத் நகரை சேர்ந்த டி பிரவர்மா ரெட்டி என்னும் 41 வயது பெண்மணி ரியல் எஸ்டேட் அதிபர் மகிபா ரெட்டியின் மனைவி ஆவார். பிரவர்மா ஐதராபாத் காவல்துறையினரிடம் தனக்கு மருந்தாளுமை நிர்வாக தலைமைப் பதவி பெற்று தருவதாக கூறி பாஜக பொதுச் செயலர் பி முரளிதர ராவ் உள்ளிட்ட ஒன்பது பேர் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் பிரவர்மா, ”எனக்கு மருந்தாளுமை நிர்வாகத் தலைமை பதவியை பெற்று தருவதாக கூறி பாஜக பொதுச் செயலர் பி முரளிதர ராவ் மற்றும் அவரை சேர்ந்த 8 பேர் என்னிடம் இருந்து ரூ. 2.1 கோடி வரை பணம் பெற்றனர். அத்துடன் என்னிடம் ராவ் ஒரு வேலைவாய்ப்பு உத்தரவையும் அளித்தார். அதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கையொப்பம் போர்ஜரி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்ப்டையில் ஐதராபாத் காவல் துறையின் பாஜக பொதுச் செயலர் ராவ் உள்ளிட்ட 9 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி, போர்ஜரி, குற்றவியல் சதி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். பாஜக பொதுச் செயலர் முரளிதர் ராவ் இந்த குற்றச்சாட்டு பொய் எனவும் தமக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.