மும்பை:

உலக அளவில் அதிக அளவாக 70 லட்சம்  பிரியாணியை பரிமாறி சாதனை படைத்த பாரடைஸ் உணவகத்தின் ஐதராபாத் கிளை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.


மும்பையில் ஆசிய உணவு மாநாடு நடைபெற்றது. பிரியாணிக்கு உலக அளவில் பெயர் பெற்ற  பாரடைஸ் உணவகத்தின் ஐதராபாத் கிளையும் பங்கேற்றது.

கடந்த 2017-ம் ஆண்டு மட்டும் இந்த உணவகத்தில் 70 லட்சம் பிரியாணி பரிமாறப்பட்டுள்ளது.

பாரடைஸ் உணவகத்தின் இந்த சாதனை 2019-ம் ஆண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நல்ல பிரியாணியை பரிமாறும் சிறந்த உணவகம் என்ற விருதையும், ஆசிய உணவு மாநாட்டில் பாரடைஸ் உணவகம் பெற்றது.

இது தங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதற்கு காரணம் எங்கள் அன்பான வாடிக்கையாளர்கள்தான் என்று பாரடைஸ் உணவகத்தின் தலைமை செயல் அதிகாரி கவுதம் குப்தா தெரிவித்துள்ளார்.

பாரடைஸ் உணவகம் 1953-ம் ஆண்டு ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. அப்போது சிறிய டீ கடையாகத்தான் இருந்தது. நாளடைவில் வளர்ந்து உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது.