தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் பொதுத் தலைநகராக இயங்கி வந்த ஹைதராபாத் இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே தலைநகராக விளங்கும்.
2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபோது 10 ஆண்டுகள் ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் தலைநகராக செயல்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 இன் படி பொதுத் தலைநகராக செயல்பட்டு வந்த ஹைதராபாத் இன்று முதல் பொது தலைநகராக செயல்படுவது நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநில பிரிவினையின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டது.
2014ம் ஆண்டு ஜூன் 2 ம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவான நிலையில் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.