ஐதராபாத்
ஐதராபாத் நகர மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்துள்ளார்.
பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கட்வால் வியலட்ச்மி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் ஆவார். நேற்று இவர் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தஸ்முஷி ஆகியோர் முன்னிலையில் விஜயலட்சுமி தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்வால் விஜயலட்சுமியுடன் அவரது சகோதரர் வெங்கட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
விஜயலட்சுமியின் தந்தையும், பாரதீய ராஷ்டிர சமிதி கட்சி பொதுச்செயலாளருமான கே.கேசவ ராவ், பாரதீய ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினர். கடியம் ஸ்ரீஹரி, அவரது மகள் காவ்யா ஆகியோர் பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் விரைவில் காங்கிரசில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் காவ்யாவை வாரங்கல் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராகப் பாரதீய ராஷ்டிர சமிதி நிறுத்திய நிலையில் அவர் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.