ஐதராபாத்:

ஐதராபாத் சார்மினார் அருகே 2007ம் ஆண்டு ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 59 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரணை நடத்தியது. என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நீதிபதி ரவீந்தர் ரெட்டி வழக்கை விசாரித்து வந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார். அப்போது போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதி ரவீந்தர் ரெட்டி இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். நீதித்துறை வட்டாரத்தில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.