
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு நேற்று (28ந்தேதி) முதல் 30ந்தேதி வரை நடை பெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் ஐதராபாத் வருகை தந்துள்ளார்கள். அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப்பும் வந்துள்ளார்.
அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்து வரும் இவாங்கா, நேற்று அதிகாலை இந்தியா வந்தடைந்தார்.

இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்னர் பிரதமர் மோடியுடன் இவாங்கா டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் உடன் இவாங்கா சந்தித்து பேசினார். இவாங்கா டிரம்ப், மோடி வருகையை ஒட்டி ஐதராபாத் நகரம் முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel