
துபாய்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது ஐதராபாத் அணி.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை மட்டுமே அடித்தது.
எனவே, சற்று எளிதான இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய ஐதராபாத் அணியில், கேப்டன் டேவிட் வார்னர் 4 ரன்களுக்கே நடையைக் கட்டினார். பேர்ஸ்டோ 10 ரன்களுக்கு அவுட்டாக, மூன்றாவது விக்கெட்டாக வந்த மணிஷ் பாண்டே ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.
மொத்தம் 47 பந்துகளை சந்தித்த அவர் 8 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 83 ரன்களைக் குவித்தார். அவருடன் இணையாக ஆடிய விஜய் சங்கர், 51 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார்.
கூடுதல் ரன்களாக கிடைத்தவை 7. இறுதியில், 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 156 ரன்களை எடுத்து, 8 விக்கெட்டுகளில் பிரமாண்ட வெற்றிபெற்றது ஐதராபாத் அணி.