துபாய்: ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியை 88 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் இழந்தது டெல்லி அணி.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களைக் குவித்தது.
பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, துவக்கம் முதலே பெரியளவில் தடுமாறி வந்தது. அந்த அணிக்காக பெரிய இன்னிங்ஸ் ஆடுவோர் யாருமில்லை.
மொத்தம் 35 பந்துகளில் 36 ரன்கள் அடித்த ரிஷப் பண்ட்தான் பெரிய இன்னிங்ஸ் ஆடியவர். 9 பந்துகளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 20 ரன்கள் எடுத்த துஷார் தேஷ்பாண்டேயின் ஆட்டம்தான் சிறந்த ஆட்டம்.
முடிவில், 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்து சரண்டர் ஆனது டெல்லி அணி.
ஐதராபாத் அணி சார்பில் பந்துவீச்சாளர் ரஷித்கான் பெரிய சாதனையை நிகழ்த்தினார். அவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி, வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஜேஸன் ஹோல்டர் மட்டுமே அதிகபட்சமாக 4 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கி, 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சந்தீப் ஷர்மா மற்றும் தங்கராசு நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.