ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவன் இறந்த நிலையில், மனஉடைந்த அவரது மனைவி ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதைக்கண்ட அவரது 3வயது குழந்தையும், ஏரியில் இறங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதன் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவின் லோஹா பகுதியை சேர்ந்த நபர் மனைவி குழந்தையுடன் உள்ளூரில் வேலை கிடைக்காததால் வேலை தேடி மகாராஷ்டிரா சென்றுள்ளார். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சசி அடைந்த அவரது மனைவி, கணவனின் இறப்பை தாங்க முடியாமதல் அருகிலுள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயது குழந்தை உள்ள நிலையில் , ஏரியின் கரையோரம் இறக்கி விடப்பட்ட அந்த குழந்தை, தாய் ஏரியில் குதித்ததைக் கண்டு தானும் தண்ணீருக்குள் இறங்கியுள்ளது. இதனால், அந்த குழந்தையும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.