சென்னை: யுடியூப் பார்த்து கணவர் மற்றும் அவரது உறவினர் பிரசவம் பார்த்த நிலையில், குழந்தை இறந்து பிறந்ததுடன், தாய் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிஜிட்டலின் வளர்ச்சி இன்று பலரது மரணத்துக்கும் காரணமாக அமைந்து வருகிறது. பலர் சமூக வலைதளங்களில் வரும் பதிவுகள் வீடியோக்களை உண்மை என நம்பி, பல்வேறு நிகழ்வுகளை உறுதி செய்ய முயல்கின்றனர். இதனால், சிலர் உயிரிழந்த சோகமும் ஏற்படுகிறது. அதுபோல, ராணிப்பேட்டை மாவட்டத்தில், கருவுற்ற பெண்ணுக்கு, அவரது கணவர் மற்றும் சகோதரி சேர்ந்து, டியூடியூப் பார்த்து பிரவசம் பார்த்த நிலையில், குழந்தை இறந்து பிறந்துள்ளது. மேலும் தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கடந்த 18ந்தேதி நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சிகிச்சை பெற்றுவரும் கோமதி மற்றும் அவருடைய உறவினர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.