ஸ்ரீநகர்

காஷ்மீர் பகுதியின் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பில்  ஜுனாய்த் அஷாரஃப் இணைந்துள்ளார். இவர் தெக்ரீக் ஈ ஹுரியத் அமைப்பின் தலைவரின் மகன் ஆவார்.

காஷ்மீர் பகுதியில் இயங்கும் தீவிர வாத அமைப்புகளில் ஒன்று தெஹ்ரிக் ஈ ஹுரியத் அமைப்பாகும்.   இந்த அமைப்பின் தலைவராக  முகமது அஷ்ரஃப் செராய் உள்ளார்.  இவருக்கு நான்கு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர்.  இவரது மகன்களில் ஒருவரான ஜுனாய்த் ஷெராஃப் (வயது 26) கடந்த 2014ஆம் வருடம் தனது பட்டப்படிப்பை காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.   அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜுனாய்த் காணாமல் போனதாக அவர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர்.   இந்நிலையில்  ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிர வாத அமைப்பின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியது.

அதில் ஜுனாய்த் கருப்பு உடை மற்றும் கருப்பு தொப்பி அணிந்து ஒரு ஏகே 47 துப்பாக்கியை கையில் பிடித்துள்ளார்.  அதில் 2018ஆம் வருடம்  மார்ச் மாதம் 24ஆம் தேதி ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பில் அவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   அவருடைய குறியீடுப் பெயர் அமர் பாய் எனவும் அடுத்த தலைவர் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சாதர் கவல் நிலைய அதிகாரி, “ஜுனாய்த் காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.   நாங்கள் அதை பதிவு செய்து தேடி வருகிறோம்.  இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை” என தெரிவித்துள்ளார்.