
கோலாலம்பூர்:
மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான நகைகள், விலைஉயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் பு கார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என சமீபத்தில் பிரதமராக பதவியேற்று கொண்ட பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்திருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் மலேசிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
நஜீப்புக்கு சொந்த வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், வெளிநாடு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மலேசிய நாட்டின் வளர்ச்சி நிதியத்தில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் கூறப்பட்டது. இந்த ஊழல் காரணமாக 700மில்லியன் டாலர்கள் நஜீப்புக்கு கிடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த ஊழல் புகார் காரணமாகவே நடைபெற்ற மலேசிய தேர்தலில் நஜீப் தோல்வியை தழுவினார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த தற்போதைய பிரதமர் மகாதீர் முகதது உத்தரவிட்டார். அதையடுத்து நஜீப் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்தே, நஜீப்பின் அலுவலகம், வீடு மற்றும் தனியார் குடியிருப்பு மற்றும் தலைநகர் கோலாலம்பூ ரில் நஜிப்புக்கு சொந்தமான பல இடங்களில் கடந்த சில நாட்களாக ஊடகங்களின் முன்னிலையில் சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
அப்போது, நஜீப்பின் விட்டில் இருந்து லாக்கர், விலையுயர்ந்த கைப்பைகள் அடங்கிய 284 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.

இதில், மலேசியாவின் ரிங்கெட், அமெரிக்க டாலர்கள், கைகடிகாரங்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், ஏராளமான பைகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளளார்.. மேலும், தற்போது கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக மலேசியாவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆனால், இந்த சோதனை தேவையற்றது என்றும், தன்னை துன்புறுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் முன்னாள் பிரதமர் நஜீப் குற்றம் சாட்டி உள்ளார்.
[youtube-feed feed=1]