டில்லி:

டைபெற்று முடிந்த லோக்சபா தேத்லில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆம்மி கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், இன்று கட்சி தொண்டர்களிடையே பேசிய கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும்,  2020ம் ஆண்டு டில்லி  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராவோம் என்று கூறினார்.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. டில்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கான  லோக்சபா நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. மாநிலத்தை ஆட்சி செய்து வந்த ஆம்ஆத்மி கட்சி படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் மேற்கு டெல்லியின் பஞ்சாபி பாக் கட்சியில் கட்சித் தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய  அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம் என்றவர், வரும் 2020ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற இப்போதே தயாராவோம் என்று கூறினார்.

அரசியல் மற்றும் பொதுவாழ்வுக்கு வந்தால், இதுபோன்ற அவமானத்தை  சந்தித்துக் கொள்ள நேரிடும், அதற்கான திறன் வேண்டும் என்று ஏற்கனவே சமூக சேவகர் அன்னா ஹசாரே தன்னிடம் கூறியிருக்கிறார் என்றவர், இந்த அவமானத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

மேலும்,  நீங்கள்  “இப்போது, நீங்கள் டெல்லி மக்களிடம் சென்று பெரிய தேர்தல் முடிந்துவிட்டது மற்றும் சிறிய தேர்தல்கள் வரப்போகின்றன என்று சொல்லுங்கள் என்றவர், ஆம்ஆத்மி கட்சி ஒருபோதும், அதன் மிகப்பெரிய  வலிமையான  நேர்மை மற்றும் கடின உழைப்பு கொள்கைகளில் இருந்து விலகிவிடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.