ஐக்கிய நாடுகள் சபை:
சோமாலியாவில் மனிதாபிமான தேவைகளுக்குப் பதிலளிக்கும் தற்போதைய நிதி ஆறு ஆண்டுகளில் மிக மோசமானது என்பதை ஐ.நா. நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், சோமாலியாவின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்டப் பாதிப் பேரின் அடிப்படைத் தேவைகளை மனிதாபிமான ஏஜென்சிகள் பூர்த்தி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் உணவுப் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. இது பருவகால வறட்சியின் போது விரைவாக மோசமடையக்கூடும் என்பதையும், மழை இன்மை காரணமாக இந்த நிலைமை மேலும் மோசமாயும்.
“மார்ச் முதல் மே வரை மாதந்தோறும் சராசரியாக 1.52 மில்லியன் மக்கள் உணவு உதவி பெற்றாலும், பல பகுதிகளில் நெருக்கடியைத் தடுக்க தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட உணவு உதவி போதுமானதாக இல்லை” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் வரை மழை பெய்யாத நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரை மிதமான முதல் கடுமையான வறட்சி நிலைகள் ஏற்படக்கூடும் என்று என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, சோமாலியாவில் 5.9 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் 2.9 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.