சென்னை:
விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக தமிழக தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பருவ மழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி முற்றிலும் கேள்விகுறியாகிவிட்டது. மழை இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின.
இதனால் அதிர்ச்சியில் விவசாயிகள் மரணமும், தற்கொலையும் தமிழத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களும், அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது மத்திய அரசு இது வரை கவனம் செலுத்தாமல் இருப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்தது தொடர்பாக 6 வார காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என கூறப்படுள்ளது.
தொடர்ந்து விவசாயிகள் மரணம் என்ற ஊடகங்களின் செய்தி அடிப்படையில் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகளின் உயிரிழப்பை தடுக்க எடுத்த அல்லது எடுக்க போகும் நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழக தமிழக செயலாளருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.