பெங்களூரு

த்திரிகையாளர்  கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றுள்ளனர்.

இந்த மாதம் 5ஆம் தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ராஜராஜேசுவரி நகரில் உள்ள அவர் வீட்டின் வாயிலில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.  இந்த சம்பவம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது பல நாட்டு தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பெங்களூருவில் இந்த படுகொலையை கண்டித்து கன்னட எழுத்தாளர்கள் பிரம்மாண்டமான ஒரு பேரணி நடத்தினர்.  பேரணியில் சமூக ஆர்வலர்கள், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள், மாணவர் சங்கங்கள், திரைக் கலைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையஹ்ட்தில் இருந்து செண்டிரல் கல்லூரி மைதானம் வரை நடை பெற்ற இந்த பேரணியில் கம்யூனிஸ்ட், கர்நாடகா ஜனசக்தி, ஆம் ஆத்மி, போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.