டில்லி,

றைந்த கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்த நாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அத்துடன் புதிய வடிவிலான 10 ரூபாய் நாயணத்தையும் வெளியிடுவதாக அறிவித்து உள்ளது.

பிரபல கர்நாடக இசை பாடகியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை ஒட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் மத்திய புதிய 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதாக அறிவித்து உள்ளது.

இந்த 100 ரூபாய் நாணயம் 44 மில்லிமீட்டர் அளவில் வட்டமாக இருக்கும் என்றும், இந்த நாணயமானது 50 சதவிகிதம் வெள்ளியாலும், 40 சதவிகிதம் செம்பு கலந்தும், 05 சதவிகிதம் நிக்கல் மற்றும் 05 சதவிகிதம் துத்தநாகத்தாலும் கொண்ட கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ரூபாய் நாணயமானது 27 மில்லிமீட்டர் வட்டத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நாணயம்,  92 சதவிகிதம்  செம்புவினாலும், 06 சதவிகிதம் அலுமினியம், 02 சதவிகிதம் நிக்கல் கொண்ட கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள்  எம்.எஸ்.சுப்புலட்சுமயின் பிறந்தநாளன்று  வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.