அமெரிக்கா – சீனா வர்த்தகப்போரில் அமெரிக்கா சீனாவில் சார்ந்த 70 நிறுவனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் அமெரிக்காவில் இருந்து எந்த நிறுவனமும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களோடு வர்த்தக உறவு வைக்ககக்கூடாது என்பதால் ஹவாய் நிறுவனத்திற்கு பெரும் சிக்கல் எழுந்தது.
ஏனெனில் ஹவாய் நிறுவனத்தின் பெரும்பாலான இயங்குதளங்கள் ஆல்பாபெட் நிறுவனத்தின் ஆன்டிராய்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளங்கள் நிறுவப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்தன. அமெரிக்காவில் தடைஉத்தரவால் ஹவாய் (Huawei) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை தொழில்நுட்ப உதவிகளும் நிறுத்தப்பட்டு விட்டன.
இந்நிலையில் சிறிய அளவிலான பிராசசர்கள் சந்தையில் பெருமளவு கையில் வைத்திருக்கும் இலண்டனைச் சேர்ந்த ARM நிறுவனமும் ஹவாய் நிறுவனத்திற்கு தங்களின் எந்த தொழில் நுட்பத்தினையும் வாவே நிறுவனத்திற்கு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றது, வாவே நிறுவனத்தின் பல வன்பொருள் கட்டமைப்பு ARM கட்டமைப்பில் உள்ளதால் வேறு கட்டமைப்பினை பயன்படுத்த இயலாத சூழ்நிலையில் வாவே நிறுவனம் உள்ளது.
தற்போது IoT தொடர்பான சில கருவிகளையும் வாவே பயன்படுத்தி வந்த நிலையில் ஆர்ம் நிறுவமும் தனது சேவையை ஹவாய் நிறுவனத்திற்கு கொடுக்க தடைபிறப்பித்துள்ளதால் அந்நிறுவனம் மிகப்பெரும் சரிவை சந்திக்க உள்ளது
தங்களது தயாரிப்புகளில் இருந்து பெறும் வருவாயை ஹவாய் நிறுவனம் இழந்துவரும் சூழ்நிலையில் தனது டேட்டாசென்டர்களிலும் சிக்கல்களை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன