லக்னோ:

உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் யாராலும் எதையும் சாதிக்கமுடியும் என்பதை பார்வை குறைபாடு கொண்ட ஒரு பெண் நிரூபித்திருக்கிறார்.

பர்திவர்மா என்ற அந்தப் பெண்ணுக்கு தற்போது  21 வயதாகிறது.  90 சதவித பார்வை குறைபாடு கொண்ட இந்தப்பெண் ,லக்னோ இந்திய நிர்வாகவியல் கல்லூரியில், வணிகவியல் கல்வியில் இளநிலை பயின்றவர். பார்வைத்திறன் குறைபாட்டால் இவளுக்கு எங்கே வேலை கிடைக்கப் போகிறது என்று உடன் படித்தவர்கள் மட்டுமல்ல இவரது குடும்பத்தினரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் இவர் விடாமுயற்சியுடன் பாடங்களை பயின்று நல்ல மதிப்பெண்களுடன் தேர்வானார். இவரது ஆற்றலை மதித்து மைக்ரோபைனான்ஸ் வங்கி , வாடிக்கையாளர்  தொடர்பு அதிகாரியாக பணியாற்ற வாய்ப்புக் கொடுத்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பர்திவர்மா, பொதுவாக தேர்வு எழுதுவோர் தன்

கையைத்தான் நம்புவார்கள். ஆனால் நான் எனக்காக தேர்வு எழுத வருவோரின் கைகளை நம்பித்தான் இருக்கிறேன்” என்றார்.

மேலும் “ நான் உண்மையில் அதிர்ஷ்டக்காரி.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் எனக்கு ஆதரவு தருகின்றனர் “ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

பிபிஏ முடித்துள்ள இவர் எம் பி ஏ படிக்க விரும்புகிறார். அதுமட்டுமல்ல, கடினமான CAT தேர்விலும் வெற்றிபெறவும் இவர் ஆவலாக உள்ளார்.