நெல்லை: கோலாகலமாக தொடங்கிய நெல்லையப்பர் தேரோட்டம் தொடங்கிய சில வினாடிகளில் வடங்கள் அறுத்து தேரோட்டம் தடைபெற்றது. அடுத்தடுத்து 4 வடங்களும் அறுந்து, தேர் நகர மறுத்த சம்பவங்கள் அங்கேறி உள்ளது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அதுபோல, தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே, தேர் மற்றும் தேரின் வடம் குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து, வடத்தை மாற்றியிருக்க வேண்டும் என பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டது நெல்லையப்பர் தேர். திருநெல்வேலியில் டவுனில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்கள் உள்ளன. இங்கு நடைபெறும் ஆனித்தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த தேரானது சுமார் 70 அடி உயரமும், 450 டன் எடையுடன் மிகவும் கம்பீரமாக காணப்படும். இந்த தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும்.
முன்னதாக, நெல்லையப்பர் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஜூன் 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனால் திருநெல்வேலி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், விழாவின் மைய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. ‘ஓம் நமச்சிவாயா’ என்னும் கோஷமிட்டுப் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆனால், எதிர்பாரதவிதமாக வடம் பிடித்து இழுக்கத் தொடங்கிய சில வினாடிகளிலேயே தேரின் 3 வடங்கள் அடுத்தடுத்து அறுந்து கிழே விழத் தொடங்கியது. இதனால் தேர் எங்கும் நகல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர் வடம் அறுந்தது தொடர்பாக பாஜக, இந்து முன்னணியினர் அபசகுனம் என கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்த பொதுமக்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கோயில் ஊழியர்கள் மாற்று வடம் கொண்டு வந்து தேரில் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தேர் மீண்டும் இழுக்கப்பட்டது. ஆனாலும், வடம் முறையாக தயாரிக்கப்படாததால், அடுத்தடுத்து வடம் அறுந்து தேர் நின்றது.
மூன்றாவது முறையாக அறுந்த வடங்கள் மாற்றப்பட்டு 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட தேர் நிலையத்தில் இருந்து 100 அடி சென்ற நிலையில் மீண்டும் மத்தி வடம் அறுந்தது. இதனால் நான்காவது முறையாக தேர் நகர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இரும்பு சங்கிலிகளை கொண்டு தேர் இழுப்பதற்கான பணி நடக்கிறது. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். இது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அங்கிருந்த பக்தர்கள் கூறுகையில், ‘தேரின் வடம் மிக பழமையாக இருக்கிறது. ஏற்கெனவே அறுந்து போக கூடிய நிலைமையில் இருநத்தை தான் மாற்று ஏற்பாடு செய்து மாற்றி இருக்கிறார்கள். இதை மாற்றக் கோரி பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’. அறநிலையத்துறை அதிகாரிகள் ஏனோ தானோ என்று நடந்து கொள்கின்றனர். பக்தர்களின் கோரிக்கைகள் குறித்து செவி சாய்ப்பது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திமுக அரசு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக, இன்று தேரின் வடங்ம 4 முறை அறுந்து விழுந்துள்ளது. இது அபசன குணம் என்றும், ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கை காரணமாக, இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர்.