லக்னோ,
நாட்டில் ரெயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலை ஹவுரா – ஜபல்பூர் செல்லும் விரைவு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு ஷக்திகுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் புறப்பட்டு இன்று காலை உத்திரப்பிரதேசம் மாநிலத்தை அடைந்தது.
அந்த ஓபுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில் சோன்பத்ரா பகுதியில், பப்ராகுன்ட் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அந்த ரெயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இதில் யாருக்கும் எந்தவித சேதமும் இல்லை என்று கூறப்படுகிறது.
அதையடுத்து தடம்புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், யோசி முதல்வராக வந்தபிறகு, கடந்த சில மாதங்களாக ரெயில் விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை ரெயில் விபத்துக்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.