அழகு ஆரோக்கியம்  நிறைந்த குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

Must read

ழகு என்றல் விரும்பாதவர்  யாரும் இருக்க முடியாது. அழகான முகத்தை பெறுவதற்கு ஆயிரம், லட்சம் ஏன் கோடி கூட கொடுக்க தயங்காதவர்களை  நாம் பார்க்க முடியும். இன்றைக்கு அது சற்று அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. எப்படியாவது தன்னை அழகு படுத்துக் கொள்ள பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர்.

அழகு நிலையங்களும் நகர்ப்புரங்களில் மட்டும் அல்லாது சிறிய கிராமங்களிலும் அடியெடித்து வைக்கும் அளவுக்கு போய்விட்டது. இதைப் பயன்படுத்தியே பல அழகு நிலையங்கள் ப்ளிச்,பேஷியல், அது இது என்று புரியாயாத பெயர்களைச் சொல்லியே பணம் பறிக்கின்றனர். விளம்பரங்களில் வரும் க்ரீம்களைப் பார்த்து முகத்தில் பூசிக் கொண்டு அழகை கெடுத்துக் கொண்டவர்கள் பலர் உண்டு.

பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிப்படைவதும் உண்டு.  இதனால் பலருக்கு 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் உண்டாகிறது. நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக தண்ணீர் அருந்தாததாலும், சருமம் வறட்சி ஏற்படுகிறது.

நாம் முன்னேர்கள் பயன் படுத்திய மூலிகை கொண்டு நமது அழகை பாதுகாக்கலாம். முகத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள நாமே பாரம்பரிய முறைப்படி குளியல் பொடி தயார் செய்யலாம்.

  தயாரிக்கும் முறைகள்
·         உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்

·         கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்

·         கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்

·         கோரை கிழங்கு பொடி 100 கிராம்

·         உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

செய்முறை

மேற்குறிப்படவற்றை ஒன்றாக கலந்து சுத்தமான அம்மியில் அல்லது மிக்ஸியில் சுத்தமான பன்னீர் கலந்து அரைத்து சிறிய எள் உருண்டையாக  தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.

குறைந்தது அரை மணி நேரம் ஊறியதும் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். சோப்பு போட்டு கழுவக்கூடாது. இதனை  தினமும்  செய்வதனால் சில நாட்களில் முகம் அழகு கூடுவது மட்டும் அல்லாது பளபளப்பாகவும் செய்யும்.

குளியல் பொடி;

தேவையான பொருள்;

·         சோம்பு 100 கிராம்

·         கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்

·         வெட்டி வேர் 200 கிராம்

·         அகில் கட்டை 200 கிராம்

·         சந்தனத் தூள் 300 கிராம்

·         கார்போக அரிசி 200 கிராம்

·         தும்மராஷ்டம் 200 கிராம்

·         விலாமிச்சை 200 கிராம்

·         கோரைக்கிழங்கு 200 கிராம்

·         கோஷ்டம் 200 கிராம்

·         ஏலரிசி 200 கிராம்

·         பாசிப்பயறு 500 கிராம்

மேல் குறிப்பிட்ட அனைத்தையும்  தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் உடல் ஆரோக்கியமும் அழகும் கூடும்.

இந்த பவுரை  போட்டு தொடர்ந்து குளித்து வரும் போது  சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு ஆகியவை நீங்கும். வெயில் காலத்துக்கு ஏற்றது என்றே கூற வேண்டும். வியர்வையால் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும். மேனி அழகு கூடும். இது பெண்களும், குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.

 

 

More articles

Latest article