கொழும்பு: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜிகாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் பிடிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து குண்டுவெடித்ததில், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் இறந்த நிலையில், அந்த இல்லம் அடையாளம் காணப்பட்டது எப்படி? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களுடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஜிகாதிகள் தங்கியிருந்த வீடு குறித்த தகவல் எப்படி ராணுவத்தினருக்கு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு மாகாண கவுன்சில் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ரிஃபான் மஜித் என்பவருடைய நண்பர் வீட்டைத்தான் அந்த ஜிகாதிகள் வாடகைக்குப் பிடித்துள்ளனர். வீட்டில் குடியேறிய பின்னர், அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகத்திற்கு உரியதாய் இருந்துள்ளன.
வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற அவர்கள், வெள்ளிக்கிழமைதான் திரும்பி வந்துள்ளனர். அப்போது வாடகை ஒப்பந்தம் குறித்து பேசச்சென்ற வீட்டு உரிமையாளர், அந்த வீட்டில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிறகுதான், அனைத்தும் நடந்துள்ளது. அந்த வீட்டில் இன்னும் பல ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் வேளையில், இன்னும் 56 ஜிகாதிகளாவது தலைமறைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.