சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 14ந்தேதி முதல் இன்று (29ந்தேதி) வரை ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் எத்தனை பேர், அவர்களில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, 14ந்தேதி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு 849 பேர் வந்ததாகவும், அவர்களில் 2 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
16ந்தேதி தேதி ரயில் மூலம் வந்தவர்கள் 847 பேர். இதில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
17ந்தேதி டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ரயிலில், 1105 பேர் வந்தாகவும், அவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
19ந்தேதி புனேவில் இருந்து தென்காசி வந்த ரயிலில், 1090 பேர் வந்ததாகவும், அவர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
22ந்தேதி ஜலந்தரில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் வந்த ரயிலில், 250 பேர் வந்ததாகவும், அவர்களில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாகவும்,
22ந்தேதி குஜராத் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த 610 பேரில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
25ந்தேதி சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரசில் 386 பேரில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25ந்தேதி மும்பையில் இருந்து திருநெல்வேலி வந்த ரயிலில் 1577 பேரில்,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
26ந்தேதி சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரசில் வந்த 499 பேரில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து 7213 பேர் வந்துள்ளனர். அவர்களில் 6566 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது. 499 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், 5912 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், 155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.