சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 738 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும், 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாளுக்கு நாள் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் எந்த பகுதி எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்பதை 15 மண்டலம் வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
மண்டலம் வாரியாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் விவரம்…
மண்டலம் -1 திருவொற்றியூர் -4 பேர்
மண்டலம் -2 பாதிப்பு ஏதும் இல்லை..
மண்டலம் -3 மாதவரம் 3 பேர்
மண்டலம் -4 தண்டையார்ப்பேட்டை- 13 பேர்
மண்டலம் -5 ராயபுரம் – 43 பேர் (ஷாகின்பாத் போராட்டம் நடந்த பகுதி)
மண்டலம்-6 திரு.வி.க நகர் – 22
மண்டலம் -7 பாதிப்பு ஏதும் இல்லை..
மண்டலம் -8 அண்ணா நகர் 19 பேர்
மண்டலம்-9 தேனாம்பேட்டை 11 பேர்
மண்டலம் -10 கோடம்பாக்கம் 18 பேர்
மண்டலம் -11 வளசரவாக்கம் 4 பேர்
மண்டலம் -12 ஆலந்தூர் – 2 பேர்
மண்டபலம் -13 அடையாறு – 4 பேர்
மண்டபலம் 14 – பெருங்குடியில் 5 பேர்
மண்டலம் – 15 – சோழிங்கநல்லூர் 2 பேர்