சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு  309 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று  சென்னையில் மட்டும் மேலும்  44 பேருக்கு கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தநிலையில் சென்னையில் கொரோனா நிலவரம் பற்றி, பெருநகர் சென்னை மாநகராட்சி மண்டலங்கள் வாரியாக தகவல் வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு

மண்டலம் விவரங்கள் விவரம்.

மண்டலம் -1 திருவொற்றியூர்  – 2 பேர்

மண்டலம் -4  தண்டையார்ப்பேட்டை-  5 பேர்

மண்டலம் -5 ராயபுரம் – 10 பேர்

மண்டலம்-6 திரு.வி.க நகர் – 1

மண்டலம் -8  அண்ணா நகர்  7 பேர்

மண்டலம்-9  தேனாம்பேட்டை 4 பேர்

மண்டலம் -10 கோடம்பாக்கம்  6 பேர்

மண்டலம் -11  வளசரவாக்கம்  2 பேர்

மண்டலம் -12  ஆலந்தூர் – 1

மண்டபலம் -13 அடையாறு -2

மண்டபலம் 14 – பெருங்குடியில் 3 பேர்

மண்டலம் – 15 –  சோழிங்கநல்லூர் 1

ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மண்டலம் 2 மணலி, மண்டபலம் 3 மாதவரம், மண்டலம் 7 அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் யாருக்கும் கொரோனா இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.