டில்லி:

டந்த, 2015 – 16 நிதி ஆண்டில்,  2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர்.  இது, மொத்த மக்கள் தொகையில், 1.7 சதவீதம்தான்.
இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

* முந்தைய ஆண்டில், 3.65 கோடியாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 2015 – -16 வருமான வரி கணக்கு ஆண்டில், 4.07 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

* இதில் வருமான வரி செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 1.91 கோடியில் இருந்து, 2.06 கோடியாக உயர்ந்துள்ளது.

* அதே நேரத்தில், மொத்த வரி வருவாய், 1.91 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 1.88 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது

* வருமான வரி கணக்கு ஆண்டு, 2015 – 16ல், 120 கோடி மக்கள் தொகையில், 3 சதவீதம் பேர் மட்டுமே கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அதில், 2.01 கோடி பேர், ஒரு ரூபாய் கூட வரியாக செலுத்தவில்லை. 9,690 பேர், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தினர்

* ஒரே ஒருவர் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல், அதாவது, 238 கோடி ரூபாயை வரியாக செலுத்தினார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது