
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து இந்தியா முழுக்கவே திரையரங்குகள் மூடப்பட்டன. 130 நாட்களைக் கடந்தும் இப்போது வரை திரையரங்குகள் திறப்பு தொடர்பாக எந்தவொரு அறிவிப்புமில்லை .
தற்போதுள்ள திரையுலகச் சூழல் தொடர்பாக இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில்
“சிவாஜி, எம்ஜிஆர் என விசில் அடித்துப் படம் பார்த்து ரஜினி, கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாபிஷேகம் செய்து படம் பார்த்த அந்தத் திரையரங்க பிரம்மாண்டம் 5 மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடித் தீர்த்த மக்கள் செல்போனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்துப் பார்த்தபடி வியந்து கிடக்கிறார்கள். எதிர்கால திரையுலகப் பயணம் எந்தத் திசை எனக் கணிக்க முடியாமல் குழம்பிக் கிடக்கிறது திரையுலகம்.
சிவாஜி, எம் ஜி ஆர் என விசில் அடித்து படம் பார்த்து ரஜினி கமல் என கட் அவுட் வைத்து, விஜய் அஜித் என பாலாவிஷேகம் செய்து படம் பார்த்த அந்த திரையரங்க பிரமாண்டம் 5 மாதங்களாக முடங்கி கிடக்கிறது. நல்ல படங்கள் வெளியாகும்போது கொண்டாடி தீர்த்த மக்கள் கைபோனில் ஏதோ ஒரு மொழிப்படத்தை வெறித்து
— Cheran (@directorcheran) August 8, 2020
இதில் மக்களின் கருத்து என்ன. அகன்ற திரையில் படம் பார்க்கும் உணர்வு மாறியிருப்பதை ஏற்கிறீர்களா. திரையரங்கம் மீண்டும் தொடங்க எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்?” என பதிவிட்டுள்ளார் .
[youtube-feed feed=1]