புதுடெல்லி: இந்தியாவில் 55% பெற்றோர்கள், தங்களின் வளர்ந்த பிள்ளைகளுக்கு செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த விஷயத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், இந்தோனேஷியாவும் உலகிலேயே முன்னணியில் உள்ளன.

பெற்றோர்கள் தங்கள் வருமானத்தில் 37% அளவிற்கு, தங்களுடைய வளர்ந்தப் பிள்ளைகளுக்கு செலவு செய்கிறார்கள். பெற்றோர்களில் 56% பேர், தங்களுக்கென்று மிகக் குறைவாகவே எதையும் எடுத்துக்கொண்டு, தமது குடும்பத்திற்காக தியாகம் செய்கிறாரகள்.

யுஏஇ மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் பெற்றோர்களில், முறையே 79% மற்றும் 77% பேர், தங்களின் வளர்ந்தப் பிள்ளைகளுக்கு செலவழிக்கிறார்கள். இந்த வரிசையில் பிரிட்டன் 30% என்ற அளவிலும், அமெரிக்கா 26% என்ற அளவிலும் உள்ளன.

இந்தியாவும் சீனாவும் தலா 55% என்ற அளவில் உள்ளன. சிங்கப்பூரில் 45%ம், ஃபிரான்ஸில் 38% வளர்ந்தப் பிள்ளைகளுக்கு செலவழிக்கின்றனர். மொத்தம் 13 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் வாழும் 13122 பேரிடம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.