திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித போராட்டமும் நடத்தாமல் இருப்பது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
கேரள மாநிலம் அனைத்து அமைப்பு சாரா தொழில்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் பங்களிப்பையே பெரிதும் நம்பி உள்ளது. இவர்களுக்காகக் கேரள அரசு ஏற்கான்வே பல நலத்திட்டங்களை அறிவித்திருந்தது. கடந்த 2010 முதல் வெளி மாநில தொழிலாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் மூலம் வருடத்துக்கு ரூ.15000க்கு மருந்துகளும் விபத்தினால் செயலிழந்து மற்றும் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சமும் அளித்து வருகிறது. அத்துடன் நாட்டின் குறைந்த பட ஊதியத்தைப் போல் பல மடங்கு ஊதியம் இங்கு கிடைக்கிறது.
கொரோனாவால் உடனடி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பலருக்கு தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை உண்டானது. இதனால் அனைத்து மாநிலத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களும் அடிக்கடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வ்ருகின்றன்ர். குறிப்பாக மும்பை பாந்த்ரா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.
கேரளாவில் கடந்த மார்ச் மாதம் 29 அன்று கோட்டயம் பகுதியில் ஒரு சிறு குழு வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல போராட்டம் நடத்தினர். அப்போது அதிகாரிகள் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முகாம்களுக்குத் திரும்ப வைத்தனர்.
இந்தியாவில் அதிக முகாம்கள் உள்ள கேரள மாநிலத்தில் போராட்டம் நடந்தது அரசை யோசிக்க வைத்தது. அதையொட்டி கேரள அரசு இவர்களுக்கு எந்த விதங்களில் துயரம் உண்டாகிறது என்பதைக் கண்டறிய தொடங்கியது. குறிப்பாக இவர்களுக்கு உணவு விவகாரத்தில் அதிருப்தி உள்ளது தெரியவந்தது.
கேரளாவில் முகாம்களில் உள்ள அனைவருக்கும் குடும்பஸ்திரி சமுதாய சமையல் கூடம் மூலம் சாதம் உணவாக அளிக்கப்படுகிறது. அதை அரசு மற்றி இவர்களுக்கு வட இந்திய உணவாக சப்பாத்தி, டால், சதம், ஊறுகாய் ஆகியவற்றை அளிக்கத் தொடங்கியது. ஒரு சில இடங்களில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு அவர்கள் ருசிக்கு ஏற்ப சமைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தவர் அதிகம் இருக்கும் இடங்களில் சத்து கிச்சடி அளிக்கப்பட்டது.
அடுத்ததாக தனிமையில் உள்ளோருக்காக மொபைல் ரிசார்ஜ் வசதிகளை அரசு சேவை நிறுவனங்கள் மூலம் அளித்தனர். ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதத்துக்கு ரூ.100 முதல் 200 வரை ரீசார்ஜ் செய்து தரப்பட்டது. இதனால் அவர்களால் தங்கள் குடும்பத்தினருடன் நினைத்த போது எல்லாம் பேச முடிந்தது. அத்துடன் அவர்களுக்குப் பொழுது போக கேரம் போர்டு, சதுரங்கம் போன்ற விளையாட்டு வசதிகள் செய்து தரப்பட்டது,
வெளிமாநில தொழிலாளர்களுக்காக 24 மணி நேர ஆலோசனை சேவை மையங்கள் தொடங்கப்பட்டது. இங்கு 20 ஆலோசகர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டனர் இதுவரை இங்கு 7000 அழைப்புக்கள் வந்துள்ளன. ஒவ்வொரு நாளும் இங்கு ஆலோசனைக்காக கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரங்கள் தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டு குறைகள் உடனடியாக தீர்க்கப்படுகின்றன. அத்துடன் இந்த பணியில் மாவட்ட நீதிபதிகள் மற்றும் தொழிலாளர் ஆணையர்களும் ஈடுபட்டு குறைகளை உடனடியாக களைய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதனால் கேரளாவில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடாமல் உள்ளனர். தற்போது ஊரடங்கு மே மாதம் 3 வரை நீட்டிக்கப்பட்ட போதும் இவர்கள் போராட்டம் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.