டில்லி:
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை விமர்சனம் செய்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், ‘‘ தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சொல்ல விரும்பவில்லை.
விவசாய பாதிப்பை சமாளிக்க எத்தகைய யுத்தி கையாளப்படுகிறது. 2020ம் ஆண்டில் விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எப்படி சாத்தயம். இந்த வாக்குறுதி எப்படி நிறைவேற்றப்படும். நிதி தொடர்பான கணக்குகளில் தவறு நடந்திருக்கலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel