டில்லி:
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை யொட்டி காங்கிரஸ் கட்சி கடந்த 2ந்தேதி தேர்தல் அறிக்கை வெளி யிட்டது. அதில் ஏராளமான மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் மோடி அரசால் பாழ்படுத்தப் படும் வரும் பல்வேறு திட்டங்களை சீரமைப்பது குறித்தும், தேச துரோக சட்டம், சிறப்பு அந்தஸ்து சட்டம் போன்றவை குறித்தும் விரிவான விளக்கம் தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் அறிக்கை குறித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பணிகளை தொடங்கிய நிலையில், தேர்தல் அறிக்கைதயாரிப்பிற்காகவிரிவான ஆலோசனையை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் பல்வேறு அமைப்பினரை சந்தித்த்து கேட்டறிந்தது.
இது தொடர்பாக 174 ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 121 மக்கள்மன்ற ஆலோசனைகளாகவும் 53 ஆலோசனைகள் பல்வேறுகளங்களைச் சார்ந்த வல்லுநர்களுடனும் நடந்தது.
24 மாநிலங்களிலும் , 3 யூனியன் பிரதேசங்களிலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. துபாயில் நடைப்பெற்றஆலோசனையில் 12 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது. அதிகாரப்பூர்வமாக 1.6லட்சம் பரிந்துரைகளை கட்சிக்கு Whatsapp மற்றும் மின்னஞ்சல் மற்றும் அறிக்கைவலைத்தளம் மூலம் வந்ததாகவும் தெரிவித்து உள்ளது.
தேசத் துரோகச் சட்டத்தை அகற்றப்படும் என வந்த அறிவிப்பை ஒட்டி எழுந்த கேள்வி களுக்கு காங்கிரசின் கட்சி கூறும் விளக்கம் பதில்….
தேசத் துரோகச் சட்டம் காலனித்துவ சட்டமாகும், அது தவறாகபயன்படுத்தப்படுவதின் அடிப்படையில் அது முழுவதுமாகநீக்கப்படும்.
இந்தியாவிற்கு எதிராக குற்றம் புரிபவர்களை தண்டிக்க பல்வேறுசட்டங்கள்உள்ளன.
இதில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவைஅடங்கும். இதில் அப்பாவிமக்களை பாதுகாப்பதற்கும் தேசிய நடவடிக்கை களுக்கு எதிரான குற்றவாளிகளைத் தண்டிக்கவும் போதுமானவழிவகைஉள்ளது.
மாணவர்கள், பத்திரிகைத்துறை மற்றும் பாதிப்புக்குள்ளான மக்களை துன்புறுத்தவே பாஜகஇந்தச் சட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளது.
AFSPAக்கு (Armed Forces (Special Powers) Acts (AFSPA) திருத்தங்கள் செய்யும் பரிந்துரைக்கு காங்கிரசு என்னபதிலளிக்கிறது?
AFSPA அகற்றப்படும் என்று பா ஜ க பொய்யை பரப்புகிறது. அப்படி எதுவும் நடக்காது.
இந்த சட்டத்தில் மூன்று திருத்தங்கள் செய்யப்படும், காணாமல் போகச் செய்வது ,பாலியல் வன்முறை மற்றும் சித்தரவதைஆகியவற்றிற்கான தடைக்காப்பு மட்டுமே நீக்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் தேவைப்படாது என்றுபிஜேபி முன்னர் கூறியது.
பிஜேபிஅரசாங்கத்தின் கீழ் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆயுதப்படை களின் நலன்களை மட்டுமே காங்கிரசு முன்னுரிமையாகக் கொண்டு செயல்படும்.
ஒருபதவி ஒரு ஓய்வூதியம் செயலாக்கத்தில் ஏதாவது முரண்பாடுகள் இருப்பின் அது களையப்படும்.
தியாகிகளின் குடும்பங்களுக்கானஇழப்பீடு பற்றியசீரான கொள்கைஏற்படுத்தப்படும்.
இந்தியஅரசின் சிவில் பணிகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கானஇடைநிலை நுழைவு குறித்த கொள்கை வகுக்கப்படும்.
வீடு கட்டமைப்பு, கல்விமற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.
NYAY திட்டத்திற்கு எங்கிருந்து பணம் வரும்? NYAY யின் தாக்கங்கள் NFSA மற்றும் MGNREGA எவ்வாறு இருக்கும்?
NYAY அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு கட்டமாக நிறைவேற்றப்படும்.
பொருளாதார வளர்ச்சிக்கான அத்துணைபணிகளும் மேற்கொள்ளப்படும். அதன் விளைவாக NYAY ஆதரிக்க போதுமான வளங்கள் உருவாக்கும் என்பது உறுதி. அதைக் கொண்டு உணவு மற்றும் வாழ்வு பாதுகாப்பை NYAY உறுதி செய்யும்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசாங்கம் மகாத்மா காந்தி நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறிவித்தபோது இதே போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. எனினும், அரசாங்கம் அதற்கானவளங்களை உயர்த்துவதில் வெற்றிகர மாகவும் செயல்பட்டது.
விளம்பரம் மற்றும் சிலைகளுக்கு பி.ஜே.பிஅரசாங்கம் செலவு செய்வது போலல்லாது, காங்கிரஸ் வளர்ச்சிக்காகஅனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இவ்வாறு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.