னிகளில் சிறந்த மருத்துவ குணம் கொண்ட பழமாக காலம்காலமாக மாதுளை விளங்குகிறது. மாதுளம் பிஞ்சி, மாதுளம் பூ, இழை, வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்ட சர்வரோக நிவாரணியாக விளங்குகிறது

மாதுளம் பழம் 
மாதுளம் பழம் வயிற்றில் இருக்கக் கூடியப் புண்களை ஆற்றி ஜீரண சுரப்பிகளைத் துண்டி செரிமானப் பிரச்சினைகளைச் சரி செய்கிறது.  ஆன்டாக்சிடெண்ட்ஸ்களை கொண்டுள்ளதால் வயோதிகத்தினை தள்ளிப்போடுகிறது. புற்று நோய் வராமல் தடுக்கிறது, குறிப்பாக மார்ப்பக புற்று நோய்களை (Reduce Cell proliferation, Induces apoptosis on Breast Cancer, Anti Tumorigenic) தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது செல்களின் வளர்சிதை மாற்றத்தினை சீர்செய்கிறது,

ஆன்டிபாக்டீரியா (Anti Bacteria மற்றும் ஆன்டிபங்கல் ( Anti Fungal) இருப்பதால் வயிற்றில் இருக்ககக்கூடிய கிருமிகளைக் கொல்கிறது, இதனால் வயிற்றில் ஏற்படும் புண், வயிற்றுப்போக்கு, வயிற்றில் இருக்க்ககூடிய புஞ்சைகளை அழித்து செரிமானப்பகுதிகளை காக்கிறது, இரத்த மூலத்தினை தடுக்கிறது.

பெண்கள்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளைச் சரி செய்கிறது,  இரத்த சோகை (அனிமியா – Anemia)சரி செய்கிறது.  உடற் பருமனைக் குறைக்கவும் உதவுகிறது.  எலும்பு வலிகளையும் குறைக்க உதவும்

ஆண்களுக்கு

பிராஸ்டேட் கேன்சர் வராமல் தடுக்க உதவுகிறது. ஆண்மைக் குறைவு ( Erectile Dysfunction), துக்கமின்மை , வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் நோய், உடலில் பலமின்மை இவற்றைச் சரி செய்கிறது/ இது மேற்பூச்சாகத்  தோலில் ஏற்படும் கொப்பளங்கள் மற்றும் வெயிலினால் ஏற்படும் நிறமாற்றங்களை சரி செய்கிறது, முடி உதிர்வினையும் தடுக்கிறது.

சுவாச நோய், உயர் இரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

எடுத்துக்கொள்ளக்குடிய அளவுகள்

தினமும் இரவில் ஒரு பழம் எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரை ஆலோசித்தபின் எடுத்துக்கொள்வது சிறப்புச்

சித்த மருத்துவம்

மாதுளம் பழம்.
pomegranate (Punica granatum -Fruit).
சங்கையறச் சொற்றவிர்க்குஞ் சந்நியா சஞ்சர்த்தி
யங்கையதி தாகமெமைச் சாருமோ-கங்கை
விருந்தாடி மக்கட் கிரத்தலைச்செய் நோய் போ
மிருந்தாடி முக்கனிகள் பெண்.

சித்தர் பாடல் 1

வாய்ரூறற கசப்பு வாந்தி விக்கல் மந்தமாக
காய் வெப்ப நெஞ்செரிவு காதடைப்பு-வாயா
மயக்கம் தீர்ந்து விடும் மாதுளம் பத்தார்
றயக்கமறத் தேமொழியே சாற்று.

சித்தர் பாடல் 2

வாய்ப்புண், வயிற்றுப்புண், குன்மம், விக்கல், வாந்தி, நெஞ்செரிவு, செரிமானமின்மை, காதடைப்பு, இரத்த சோகை, உடல் பலவீனம், ஆண்மைக்குறைவு ஆகிய குறைபாடுகள் நீங்கும்,.

சித்த மருத்துவத்தில் மாதுளை மணப்பாகு வாங்கியும் ஒரு நாளைக்கு ஒரு 30 மி.லி மாதுளை மணப்பாகுவை,  200 மி.லி. நீரில் கலந்து காலை, இரவு குடிக்கவும் (மாதுளை பிஞ்சு வயிற்றுப் போக்கினை தடுக்க பயன்படுத்தலாம், தினமும் மாதுளைப்பழம் எடுத்துக்கொள்வது நன்மையைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகள் மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடுத்துக்கொள்ளவேண்டும்)

மருத்துவர் பாலாஜி கனகசபை MBBS.,PhD
அரசு மருத்துவர்
கல்லாவி
99429 22002