டில்லி:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிகடந்த 2ந்தேதி தேர்தல் அறிக்கை  வெளியிடப் பட்டது. அதில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் புரட்சிகரமான திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான திட்டங்கள், தேசிய பாதுகாப்பு, வரிக்கொள்கை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் தெளிவாக விளக்கி உள்ளது.

‘பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்டமக்கள், பழங்குடியினர் மற்றும் விளிம்பு நிலைமக்கள் அதிக அளவிலான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அந்த  மக்களுக்கானதிட்டங்கள் என்னென்ன என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.

வீடுகள், விடுதிகள், பொதுவெளிகளில்  மதம், சாதி, பாலினம், இயலாமை அல்லது மொழி யின் அடிப்படையில் பொது மக்களுக்கு கிடைக்கக் கூடியப் பொருட்கள் மற்றும் சேவை களிலான பாகுபாட்டைத் தடுக்க பாகுபாடு ஒழிப்புச்சட்டம் இயற்றப்படும்.

ஷிசி, ஷிஜி, ளிஙிசிமற்றும் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் நீதித்துறையின் அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

17-வது  மக்களவை மற்றும் மாநிலங்களவையின் முதல் கூட்டத்தில் வெறுப்புணர்வுகளைத் தடுக்கமற்றும் தண்டிக்க ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்படும்.

ஒற்றுமை, மதஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் சமரசம் பேணிகாக்க தேசிய ஒருங்கிணைப்புக் குழு மீண்டும் உருவாக்கப்படும்.

அனைத்து மதங்களின் தலைவர்கள்அடங்கியமதநல்லிணக்கக் குழு அமைக்கப்படும்.  அதன் மூலம் ,மதம், சகிப்புத் தன்மை , சகோதரத்துவம் மற்றும் நம்பிக்கைக்குரிய உரையாடல்கள் மூலம் மதங்களுக்கு இடையேயானகலாச்சாரப்பரிமாற்றம் ஏற்படவழிவகை செய்யப்படும்.

காங்கிரஸ் தேசியப் பாதுகாப்புச் சம்பந்தமான சவாலை எப்படி எதிர்கொள்ளும்?

பயங்கரவாதத்திலிருந்து விடுதலையைவழங்கும் தேசிய பாதுகாப்பு கொள்கையைநாங்கள் உருவாக்குவோம்.

தேசியஜனநாயக முன்னணிஅரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பிற்கான செலவினங்கள் குறைக் கப்பட்டன. அதைமாற்றிஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பாதுகாப்புத் துறைக்கான நிதி அதிகரிக்கப்படும்.

ஆயுதப்படையை  நவீனமயமாக்கும் திட்டம் வெளிப்படையாகநடத்தப்படும் . ஒருபதவி ஒரு ஓய்வூதியத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை இராணுவப் படையினருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பாதுகாப்பு , கல்விமற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தநடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ்அரசாங்கத்தின் கீழ் வரி கொள்கைஎன்னவாக இருக்கும்?

காங்கிரஸ்எளிய, வெளிப்படையானமற்றும் முற்போக்கான ஒரு வரிக் கொள்கையைஅமல்படுத்தும்.

பிஜேபிஅரசாங்கத்தால் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் வரிபயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் முற்றுபுள்ளி வைக்கும்.

எளிமைப்படுத்தப்பட்டநிstதிட்டத்தை காங்கிரஸ் செயல்படுத்தும்.

ஜி.எஸ்.டி 2.0 மூலம் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நிலையான, ஒற்றைவரி விகிதம் அமல்படுத்தப்படும்.

நிஷிஜி கவுன்சிலில் ஒப்புக் கொள்ளப்பட்ட 2 ஆண்டுகளுக்குள்ளாகவேரியல் எஸ்டேட் (அனைத்து பிரிவுகள்) பெட்ரோலியப் பொருட்கள், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவை ஜி.எஸ்.டி 2.0 க்குள் கொண்டு வரப்படும்.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டி 2.0 வரம்பிற்கு உட்பட்டவைஅல்ல.

பஞ்சாயத்துக்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஜி.எஸ்.டி வருவாயில் ஒருபங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இந்த அறிக்கை என்ன வழங்குகிறது?

புதிய தொழில்கள் தொடங்குவதை ஊக்குவிக்க சலுகைகள் வழங்கப்படும்.

இந்தியாவை ஒரு கண்டுபிடிப்புகளின் இடமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேள்கொள்ளப்படும்.

புதிய தொழில் தொடங்குவோருக்கு ஏஞ்சல் வரிகிடையாது.

ஜி.எஸ்.டிமற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் முற்றிலுமாக சீர்குலைந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் ஊட்டஅனைத்து நடவடிக்கைகளும்                 மேற்கொள்ளப்படும்.

இன்ஸ்பெக்டர் ராஜ் முறையிலிருந்து தொழில் முனைவோர் , சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முற்றிலுமாக விலக்கு .

புதிதாய் தொடங்கப்படும் வணிகங்களுக்கு அவை தொடங்கப்பட்ட நாளிலிருந்து 3 வருட காலத்திற்கு சிலசட்டங்கள்மற்றும் விதிமுறைகளில் இருந்து விலக்குத் தரப்படும். (தவிர குறைந்தபட்சஊதியசட்டம் மற்றும் வரிச் சட்டங்கள்)

பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒழுங்கு எவ்வாறு செயல்படுத்தப்படும்?

நாம் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சீர்திருத்தங்களுடன் இந்தியாவின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

அதிகரிக்கப்படும் வருவாய்கள் மூலம் சமூகநலத் திட்டங்களுக்கு நிதியளிக்கப்படும்.

புரட்சிகரத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி , நிதி ஒழுங்கு முறையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதை UPAI  மற்றும் II  செயல்படுத்திக் காட்டியது.

இவ்வாறு பல மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.