சென்னை: தமிழக அரசின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் வேல் யாத்திரையை தடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கின் விசாரணையின்போது, தமிழக டிஜிபி சார்பில், வேல் யாத்திரை,அரசியல் யாத்திரை என்றும், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டதுடன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறியவது.
அதையடதது, இவ்வழக்கு தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது:- தமிழக அரசின் அனுமதி இல்லாத நிலையில் வேல் யாத்திரை சென்றது எப்படி? அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தியது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் பாஜக மனு மீதான காவல்துறையின் முடிவில் தலையிட முடியாது என்று வேல் யாத்திரைக்கு அனுமதி கோரும் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்த பிறகு நீதிமன்றம் வாருங்கள் என தெரிவித்தனர்.