சென்னை: அமெரிக்க கொரோனா தடுப்பு அணியில் தமிழக பூர்விகத்தை சேர்ந்த செலினுக்கு இடம்; செலினை முக்கிய பணியில் அமர்த்திருப்பது கண்டு பெருமைப்படுகிறேன்!” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

மருத்துவர் செலின் கவுண்டர் குடும்பம்

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போரிட, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் தேசிய தொற்று பணிக்குழுவிற்கு  தமிழகத்தை பூர்விகமாக கொண்ட செலின் கவுண்டர் (celinegounder)  நியமிக்கப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான பணிக்குழுவில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் நியமிக்கப்பட்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

 

அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவர் தலைமையில் குழு அமைப்பு! ஜோபைடன் அதிரடி