1608 ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் சூரத் நகரில் வியாபாரம் செய்ய முகலாயர்களின் அனுமதியோடு குடியேறிய ஆங்கிலேயர்கள், 1611 ம் ஆண்டு மசூலிப்பட்டிணத்தில் தங்கள் முதல் உற்பத்தி கூடத்தை நிறுவினார்கள்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வாணிபம் செய்ய முகலாயர்கள், மராட்டியர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடம் அனுமதி பெற்று 1612 முதல் 1757 வரை போர்ச்சுகல், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் பிரெஞ்சு கம்பெனிகளுக்கு எதிராக வாணிபத்தில் தங்களை நிலைநாட்டி வந்தனர் ஆங்கிலேயே கிழக்கு இந்திய கம்பெனியினர்.

முகலாய சாம்ராஜ்யம் சரிவை சந்திக்க ஆரம்பித்தப் பிறகு 1757 ம் ஆண்டு நடந்த பிளாசி போர் மற்றும் 1764 ம் ஆண்டு நடந்த பக்ஸர் போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்காளத்தை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி.

இந்தியா 1765-ல்

அதுவரை இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரம் சென்னை, பம்பாய், கொல்கத்தா ஆகிய இடங்களை ஆங்கிலேய குடியிருப்பு பட்டிணங்களாக வைத்திருந்த கம்பெனி, பின்னர் பெருநிலங்களை கைப்பற்றி மாநிலங்களாக ஆட்சி செய்து வந்தனர்.

1857 ம் ஆண்டு நடந்த கிளர்ச்சிக்குப் பிறகு கிழக்கிந்திய கம்பெனி தனது ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு தாரை வார்த்தது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு கிளர்ச்சிக்கு காரணமான மாநில பகுதிகளை ஆட்சி செய்த கம்பெனியாரை மாற்றிவிட்டு, அந்த பகுதிகளை நிர்வாக காரணங்களுக்காக மாகாணங்களாக பிரித்து தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்தது.

இந்தியா 1848-ல்

1858 முதல் 1947 வரை இந்திய பெருநிலப்பகுதியில் தனது எல்லையை விரிப்படுத்திக்கொண்டே சென்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், பர்மாவின் பெரும்பகுதியையும் உள்ளடக்கி பிரிட்டிஷ் இந்தியா என்றே கூறிவந்தனர்.

சிறு சிறு சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதியை ஆட்சி செய்துவந்த பிரிட்டிஷார் அந்த சமஸ்தானங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அவற்றை தனது ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பாக இல்லாமல் தன்னாட்சி அதிகாரமுள்ள பகுதிகளாகவே இருந்தது.

இந்தியா 1915-ல்

1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற போது இதுபோன்று 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன, அவற்றில் சில பெரிய சமஸ்தானங்களாகவும் விளங்கின.

இந்திய நிலப்பரப்பில் 40 சதவீதம் இந்த 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களுக்கு சொந்தமாக இருந்தது, மேலும் அப்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் 23 விழுக்காடு இந்த சமஸ்தானத்தில் இருந்தது.

இவை தவிர, போர்ச்சுகீஸ் மற்றும் பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட வேறு சில நிலப்பரப்புகளும் இந்த பிராந்தியத்தில் இருந்தன.

இந்தியா

விடுதலை பெற்ற இந்தியா பிரிவினையால் பாதிக்கப்பட்ட நேரத்தில், ஆட்சி பொறுப்பேற்ற காங்கிரஸ் கட்சி துரிதமாகவும் சாதுர்யமாகவும் செயல்பட்டு இங்கிருந்த பல்வேறு சமஸ்தானங்களை ஒன்றிணைத்து மாநிலங்களின் சங்கமமான ஒன்றிய அரசாக இந்தியாவை கட்டமைத்தனர்.

குறிப்பு : https://en.m.wikipedia.org/wiki/Presidencies_and_provinces_of_British_India