வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் 500, 1000 ரூபாய்களை எங்கே மாற்றுவது?

Must read

வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தங்களது இந்திய பயணத்தின்போது டாக்ஸி கட்டணம் உள்ளிட்ட சில அவசர செலவுகளுக்காக சில ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுக்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள 500, 1000 நோட்டுக்களை எங்கே மாற்றுவது என்ற குறிப்புக்கள் பின்வருமாறு:

nri

1. அடுத்த 72 மணிநேரத்தில் நீங்கள் இந்தியா வருவதாக இருந்தால் இந்திய ஏர்ப்போர்ட்டுகளிலேயே உங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். டிசம்பர் 30-க்குள்ளாக வருவதாக இருந்தால் உங்கள் இந்திய வங்கிக்கணக்கிலோ அல்லது தபால் அலுவலகங்களிலோ டெப்பாசிட் செய்து கொள்ளலாம். நீங்கள் மார்ச் 31, 2017-க்கு முன்னதாக இந்தியா வருவதாக இருந்தால் பணத்தை உங்களுடன் கையோடு எடுத்து வந்து உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசாவைக் காட்டி ரிசர்வ் வங்கிகளில் அந்தப் பணத்தை மாற்றிக்கொள்ளலாம்.
2. உங்கள் நாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் நீங்கள் பழைய 500, 1000 நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுக்களையோ அல்லது அந்த நாட்டின் கரன்சியாகவோ மாற்றிக்கொள்ளலாம். ஆனால் போவதற்கு முன் அந்த வங்கிகளில் போதுமான புதுநோட்டு கையிருப்பு உள்ளதா என்று விசாரித்துவிட்டு செல்லுங்கள்.
அரபுநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் விபரம் 
அரபு நாடுகள் மற்றும் கத்தாரில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா கிளைகளின் விபரம்
அரபு நாடுகள் மற்றும் கத்தாரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளைகளின் விபரம் 
3. உங்கள் என்.ஆர்.ஓ (Non-Resident Ordinary Savings Account) வங்கி கணக்குகளில் நீங்கள் டெப்பாசிட் செய்துகொள்ளலாம்
4. ரிசர்வ் வங்கி விதிகளின்படி இந்தியாவில் உங்களிடம் 500, 1000 நோட்டுக்கள் இருந்தால் நீங்கள் எழுத்துபூர்வமான கடிதம் ஒன்றின் மூலம் இந்தியாவில் இருக்கும் ஒருவரை நீங்கள் அதற்கு பொறுப்பாளராக்கி அவர் மூலம் உங்கள் வங்கி கணக்கில் அதை டெப்பாசிட் செய்து கொள்ளலாம். அவர் வங்கிக்கு பணத்தை கொண்டுவரும்போது அந்த கடிதத்தையும் தனது அடையாள அட்டையையும் கொண்டு வந்து வங்கி அதிகாரியிடம் காட்ட வேண்டும்.
5. உங்களிடம் உள்ள பழைய பணத்தை இந்தியாவுக்கு வரும் உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பரிடமோ உறவினரிடமோ கொடுத்தனுப்பி அவர் மூலம் இங்கு உள்ள வங்கியில் உங்கள் பெயரில் டெப்பாசிட் செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கும் அவரை அதிகாரபூர்வ பொறுப்பாளராக்கும் கடிதத்தை நீங்கள் அவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும்.

More articles

Latest article