புதுடெல்லி:

பெண் ஐபிஎஸ் அதிகாரி ரினா மித்ரா ஓய்வு பெற்ற மறுநாள், புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இது தற்செயலாக நடந்ததா? அல்லது ரினா மித்ராவின் கெட்ட நேரமா? என்று தெரியவில்லை.

தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். முக்கிய பதவியில் நிரந்தரமாக சிபிஐ இயக்குனரை நியமிக்காதது ஏன் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதற்கான காரணம் இதுவாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மத்திய அரசின் நடவடிக்கைகள் ஏற்படுத்திவிட்டன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் ரினா மித்ரா. இவரது சகோதரரை மட்டுமே படிக்க வைத்த பெற்றோர், இவரை வீட்டோடு வைத்துக் கொண்டனர். இவரது சகோதாரர் போராடி, ரினா மித்ராவை படிக்க வைத்தார்.

கடந்த 1983-ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரியானார். பல்வேறு நிலைகளில் பெண்களுக்காக போராடியிருக்கிறார். நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்திருக்கிறார்.

மூப்பு அடிப்படையில் பார்த்தால், ரினா மித்ராதான் சிபிஐ இயக்குனராக வேண்டும். மேலும் இயக்குனராவதற்கு வேண்டிய அனைத்து தகுதிகளும் அவரிடம் இருந்தன.

ஆனால், வேறு விதமாக ஆண்டவன் சிந்தித்தானா? இல்லை, ஆள்வோர் சிந்தித்தார்களா என்று தெரியவில்லை.

ரினா மித்ரா ஓய்வு பெறும் நாள் வரை காத்திருந்துவிட்டு, மறுநாள் புதிய சிபிஐ இயக்குனரை நியமித்துள்ளனர்.
எல்லா தகுதிகள் இருந்தும் பெரிய வாய்ப்பை பறித்து, அவரை பரிதாப நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள்.