சென்னை: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 1000 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்களில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி மதிப்பிலான வீட்டுவசதித் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில், முதற்கட்டமாக 104 பயனாளிகளுக்கு ரூ.2.40 கோடிக்கான வீட்டுவசதித் திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.