டெல்லி: கொரோனா தாக்கம் எதிரொலியாக நாடு முழுவதும் வீடுகள் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் காரணமாக பல்வேறு தொழில்கள் நசிந்துள்ளன. சிறு, குறு தொழில்களில் எந்த முன்னேற்றமும் இன்றி லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். கட்டுமானத்துறையிலும் பெரும் சரிவு ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தினால் வீடுகளின் விற்பனை 31 சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாக என்சிஆர் பகுதியில் 45 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது. பெங்களூருவில் 39 சதவீதமும் சரிந்துள்ளதாக லியசாஸ் போரஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில், முதல் 60 நகரங்களின் வீட்டு விற்பனை 3.77 லட்சமாகவும் பின்னர் அது 2019ல் இருந்து 31 சதவீதம் குறைந்து 2.62 லட்சமாக இருந்துள்ளது. முதல் தர நகரங்களில் வீடுகளின் விற்பனை 2019ம் ஆண்டில் 2.74 லட்சமாகவும், பின்னர் 2020ம் ஆண்டில் அது 1.85 லட்சமாகவும் குறைந்தது.
என்சிஆர் பகுதியில் விற்பனை கிட்டத்தட்ட 45 சதவீதம் குறைந்துவிட்டது. 2019ம் ஆண்டில் 47,890 என்ற விற்பனையானது, சரிந்து 2020ம் ஆண்டில் 26,344 என்று சரிந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது முதல் அடுக்கு நகரங்களில் ஒட்டுமொத்த விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது.
ஆண்டு விற்பனையை பொறுத்தவரை 24 சதவீதம் வீடுகள் விற்பனை குறைந்துள்ளது, சென்னையில் விற்பனை குறைந்தபட்சம் 4 சதவிகிதம் சரிவைக் கண்டது. என்.சி.ஆர் (48 சதவீதம்), பெங்களூரு (40 சதவீதம்), கொல்கத்தா (25 சதவீதம்), அகமதாபாத் (23 சதவீதம்) ஆகிய இடங்களில் அதிகபட்ச சரிவு காணப்பட்டது.