சென்னை: தமிழ்நாடு பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கல பட்ஜெட்டில் 23,56,623 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து வரும் 20-ஆம் தேதி 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன.
இன்றையஇடைக்கால பட்ஜெட்டில், திமுக அரசின் சாதனைகளை விளக்கி உள்ளதுடன், துறை வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்தொடர்ச்சியாக அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு இருப்பதாக தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒரு முறை சிறப்பு வரன் முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் ‘உள்பட மொத்தம் 23,56,623 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள்! என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்,
நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டின் குறைவாக தான் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கும் ரூ.5,463 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TNWESafe தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு பாதுகாப்பு திட்டம்.
மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் தென் தமிழ்நாட்டில் அறிவாலயமாக உள்ளது.
சேலம், கோவை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 38 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
உயர்கல்வித்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8,505 கோடி ஒதுக்கீடு *
உயர்கல்வியில் தேசிய சராசரியை விட 47% என்ற அளவில் தமிழகம் முதலிடம்.
முதலமைச்சரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடிமைப் பணித் தேர்வுகளில் வென்ற 59 பேரில் 52 பேர் நான் முதல்வன் திட்ட பயனாளிகள்.
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.17,088 கோடி ஒதுக்கீடு
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்கள் திட்டத்தில் 6.95 லட்சம் கல்லூரி மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.