பீஜீங்:

மோடி கடந்த வாரம் 2 நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றபோத  இந்தியா மற்றும் சீனா ராணுவ தலைமையகம் இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்த இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரு நாட்டு ராணுவ தலைமையங்களுக்கு இடையே ஹாட்லைன் வசதி ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த வசதி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடி கடந்த மாதம்  27, 28 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். இந்த 2 நாட்கள் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு பேணப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக கூறப்பட்டது.

அப்போது இரு நாட்டு ராணுவ தலைமையங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியாக ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு  ஏற்படுத்த இரு நாட்டு தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.

இந்த தகவலை சீன பத்திரிகை ஒன்று ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் காரணாக இரு நாடுகளுக்கு இடையே நிலவும் எல்லை பிரச்சினை முடிவுக்கு வரும், எல்லையில் ரோந்து பணியின்போது தேவையற்ற  பதற்றத்தை தணிக்க இந்த வசதி உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.