புதுடெல்லி: ஹத்ராஸில் ஆதிக்க ஜாதியினரால் வதைக்கப்பட்ட தலித் இளம்பெண், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று உத்திரப் பிரதேச காவல்துறை கதைக் கட்டி வந்தது, அலிகாரிலுள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறிக்கையால் அம்பலமாகியுள்ளது.
அந்த மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ-சட்ட ஆய்வு அறிக்கையில், இறந்துபோன அப்பெண், கற்பழிக்கப்பட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த மருத்துவமனையில், அப்பெண்ணின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு, முதற்கட்ட ஆய்வில், அவரின் மீது பலாத்காரம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பெண்ணின் மீது பலாத்காரம் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் பிறப்புறுப்பின் வழியே பலவந்த உடலுறவு நிகழ்ந்ததா? என்பது எஃப்எஸ்எல் அறிக்கையின் மூலமே இறுதியாக முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், செப்டம்பர் 22ம் தேதிதான் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைப் பற்றி கூறியுள்ளார் என்று கூறப்படுகிறது.
நன்றி: த வயர்