கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே 13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் மெத்தனத்தால் இந்த கொலை அரங்கேறி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் போலீசாரால் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்டு, புதரில் வீசிச்சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள  மாவனட்டியை சேர்ந்த 13 வயது  சிறுவனை  சிலர் காரில் கடத்தப்பட்டு சென்று கொலை செய்து  சாலை ஓரத்தில் சிறுவனின் உடலை வீசி சென்றுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறது. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ரோகித் (13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளில் 8ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ரோகித்தின் பெற்றோர் அஞ்சட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் ( 2ந்தேதிஸ்ரீ இரவே புகார் தெரிவித்தனர்.

ஆனால், பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார்  உரி நடவடிக்கை எடுக்ககாமல் மெத்தனமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த நாளை காலையில்,  கடத்தப்பட்ட சிறுவன் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டது. தொடர்ந்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலையில் அமர்ந்து சிறுவனை மீட்டுத்தரக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், காணாமல் போன் சிறுவன் உடல் சாலையோரம் உள்ள புதரில் கிடப்பதாக தகவல்கள் வெளியானது.   அஞ்செட்டி – ஒகேனக்கல் செல்லும் சாலை ஓரத்தில் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.  சிறுவனின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

13 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.